கோவை வையம்பாளையத்தில் உள்ள உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 40 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில்
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு, அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட் டச் செயலாளர் தளபதி முருகேசன், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி துணைத் தலைவர் மணி, எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் குமார், கூடலூர் தலைவர் அறிவரசு,அன்னூர் ஒன்றிய செயலாளர் தனபால், தலைமை செயற்குழு உறுப்பினர் டிபி.சுப்பிரமணியன், பேரூர் கழக செயல்வீரர்கள் ஜனார்த்தனன், சுரேந்திரன், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.