fbpx
Homeபிற செய்திகள்சீஷா சார்பில் 1000 குழந்தைகளுக்கு புத்தாடைகள்; டாக்டர் பால் தினகரன் வழங்கினார்

சீஷா சார்பில் 1000 குழந்தைகளுக்கு புத்தாடைகள்; டாக்டர் பால் தினகரன் வழங்கினார்

காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு, சிறுவாணி மலை பகுதியிலுள்ள பின்தங்கிய சுமார் 1000 குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் பள்ளிப்பை தொகுப்பை வழங்கினார்.

காருண்யா நகரில் நடைபெற்ற கொடுத்து மகிழ்வோம் – 2024’ நிகழ்ச் சியில் டாக்டர் பால் தினகரன் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு நல் ஆலோசனைகளை வழங்கி, தொடர்ந்து சாதனையாளர்களாக மாற உற்சாகப்படுத்தினர். இவ்விழாவில், காருண்யா பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் சாமுவேல் பால் தினகரன், டாக்டர் ஷில்பா தினகரன், சகோதரி ஸ்டெல்லா ரமோலா, சகோ டேனியல் டேவிட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காருண்யா பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் பிரின்ஸ் அருள்ராஜ், துணை வேந் தர்கள் முனைவர் இ. ஜே. ஜேம்ஸ், முனைவர் எலைஜா பிளெஸ்ஸிங், முனைவர் ரிட்லிங் வாலர், பதிவாளர் விஜய் மற்றும் மரு சாமுவேல் தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img