fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் தமிழக அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலையில் தமிழக அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பொதுமக்கள் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.

இப்புகைப்பட கண்காட்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் எராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img