Homeபிற செய்திகள்சேலம் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

சேலம் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் செயல்ப டுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊராட்சி பொது வளர்ச்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், 15வது ஒன்றிய நிதிக் குழு, பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.132.03 கோடி மதிப்பீட்டிலான 5,177 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 4,438 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 739 பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேவராயம்பாளையம் முதல் கூடலூர் சாலை சந்திப்பு வரை ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டு வருவதையும், 15வது ஒன்றிய நிதிக் குழு மூலம் மகுடஞ்சாவடி ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார நிலை யக் கட்டடப் பணிகளையும், 8 வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்படி பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சேகர், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் செந்தில்முருகன், மலர்விழி, முத்துசாமி, சீனிவாசன், உதவி பொறியாளர்கள் யுவனேஷ், மேகலா, பூபதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உட னிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img