திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை மற்றும் திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்பணிகளில் ஈடுப்பட்ட தூய்மைப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதத்தில் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து சென்று அன்னதானம் உணவினை தூய்மைப்பணியாளர்களுடன் அமர்ந்து அருந்தினார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வெளி மாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர்,கழிவறை மற்றும் மருத்துவமுகாம்கள் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், திருவண்ணாமலை மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளை சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் கிரிவலப்பாதையை துரிதமாக தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, தூய்மைப்பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில் இன்றையதினம் அருள்மிகு அருணாச்சலலேசுவரர் திருக்கோயிலில் சிறப்பு தரிசரினத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், அழைத்து சென்று தூய்மைப்பணியாளர்களை சிறப்பித்து அவர்களின் பணியினை பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது-:
திருவண்ணாமலையில் நடைபெற்ற தீபத்திருவிழா மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு திரளான பக்தர்கள் நாள்தோறும் வருகைப்புரிந்தார்கள். மக்கள் பணியே, மகேஷன் பணி என்று எண்ணி அனைத்து குப்பைகளையும் அகற்றி, கிரிவலப்பாதையில் தூய்மையாக பராபரித்து குப்பைகள் அனைத்தையும் துரிதமாக துப்புரவு பணியில் ஈடுப்பட்ட அனைவருக்கும் மனதார பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றவர்கள் செய்யும் பணியை காட்டிலும், நீங்கள் செய்யும் பணியே மக்கள் பணியாகும். தீபத்திருவிழாவின் போதும் அதை தொடர்ந்து பௌர்ணமியின் போதும் தூய்மைபணியாளர்கள் 4000 நபர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு, 3 ஷிப்ட்டுகளாக தூய்மைப்பணியில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
தூய்மைப்பணியாளர்கள் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் போது கட்டாயம் கையுறைகளை அணிந்து, பாதுகாப்பாக பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும், தூய்மைப்பணியாளர்களுக்கு என்று மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனை அனைத்து தூய்மைப்பணியாளர்களும் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்கள்.
மேலும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோலியில் 400 தூய்மைப்பணியாளர்களுக்கு சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தூய்மைப்பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
தீபத் திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை, திருக்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 21 நகராட்சிகள், திருவண்ணாமலை, சேலம் மாநகராட்சி சார்ந்த ஊழியர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்ந்த பணியாளர்கள் மொத்தம் 4000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, அறங்காவலர் குழு திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), திருவண்ணாமை மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.