மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.90.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தமிழ்நாடு முதல மைச்சர் திருப்பூர் மாவட் டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல் படுத்தி வருகிறார்கள்.
இந்த திட்டப்பணிகள் பொதுமக்களுக்கு முழுமை யாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பல்லடம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கண பதிபாளையம் ஊராட்சி, கள்ளிமேடு பகுதியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் திட்ட பணிகளையும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பொங்கலூர் – கெங்கநாயக்கன்பாளையம் சாலையில் தொட்டம்பட்டி வழியாக ஆதிதிரா விடர் காலனி வரை முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.87.30 லட்சம் மதிப்பீட்டில் நடை பெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி, உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.