திருவண்ணாமலை மாவட்டத்தில் 80வது சுதந்திர தின விழாவை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்க உள்ளார். மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளன. மேலும், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
பந்தல், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், காவல்துறை அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாணவர்களின் போக் குவரத்து உள்ளிட்ட அனைத்து முன்னேற் பாடு களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.



