கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற மகோத்ஷவ்-2026 மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தையும், 2-வது முறையாக சுழற்கோப்பையையும் கைப்பற்றியது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பள்ளி தாளாளர் மற்றும் சேரன் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார், அறங்காவலரும் பள்ளி முதல்வருமான திலகம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மேலாளர் பாரதிராஜா வரவேற்றார்.
வீரர்கள் சக்திபாலன், ஜெயசுரேஷ், கணேஷ், பூபதி, சூரியபிரகாஷ், கெவின்பீட்டர், சிவசந்தோஷ், தினேஸ்ராஜ், லோகித், தருண்குமார், தீபக், சஞ்செய், சுஜித்குமார், நவீத், மதன்குமார், யோகேஸ்குமார் ஆகியோர் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர்.



