கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற குமரகுரு தொழில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் ஆண்டு விழாவில், பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் டிஆர்டிஓ விஞ்ஞானி டாக்டர் பிரகலாதா ராமாராவ், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குறித்து உரையாற்றினார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை உருவாக்கியதில் டாக்டர் கலாமின் தொலை நோக்கு சிந்தனைகளே முக்கிய காரணம் என்றும், அக்னி, பிரித்வி, ஆகாஷ், நாக், பிரம்மோஸ் உள்ளிட்ட உள்நாட்டு ஏவுக ணைத் திட்டங்கள் நாட்டை உலகளாவிய தொழில்நுட்ப வல்லரசாக மாற்றியு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ‘வளர்ந்த பாரதம் 2047’ இலக்கை அடைய பங்க ளிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். முன்னதாக, கே.சி. ஐ.ஆர்.ஐ மையத்தின் இயக்குநர் சி. வசந்தராஜ் தனது வரவேற்புரையில், டாக்டர் கலாம் உருவாக்கிய தீவிரமான பணிகளை நினைவுகூர்ந்தார்.
விழாவில் தொழில்துறை கூட்டாளர்கள், ஆராய்ச் சியாளர்கள் மற்றும் மாணவர் கண்டுபிடிப்
பாளர்களுக்கு ரிசிமிஸிமி விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், கே.சி.ஐ.ஆர்.ஐ மற்றும் ஏ.வி.ஆர் மைண்ட்ஸ் குளோபல் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.



