Homeபிற செய்திகள்மாநில வூசு போட்டியில் கடலூர் வீரர்கள் பதக்கங்கள் குவிப்பு

மாநில வூசு போட்டியில் கடலூர் வீரர்கள் பதக்கங்கள் குவிப்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியில் 23-வது மாநில அளவிலான சப்-ஜூனியர் வூசு போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட வூசு சங்க பயிற்சியாளர்கள் ரமேஷ், சுரேஷ், வினிஷ், பாபு தலைமையில் 20 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கடலூர் வீரர்கள் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை வென்றனர். டாவ்லு பிரிவில் 2 வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கமும், சண்டா பிரிவில் 2 தங்கம், 4 வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கமும் வென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img