Homeபிற செய்திகள்கடலூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்

கடலூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்

கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதலமைச் சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திற னாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 45 வகையான போட்டிகள், வரும் 24-ம் தேதி வரை நடக்கின்றன. இதில் 67,219 பேர் பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img