திருவண்ணாமலை தண்டராம்பட்டு தேனம்மை பழனியப்பன் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் தலைமை யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப் பட்டது.
முகாமில் 75 பேருக்கு பட்டா மாற்றம், 7 பேருக்கு வீட்டுமனை பட்டா, 19 பேருக்கு உட்பிரிவு பட்டா, 26 பேருக்கு இருளர் சாதிச்சான்று, 118 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் அரசு நலத்திட்டங்கள் வழங் கப்பட்டன. மொத்தம் 322 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 43 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், அவர் பொது மக்களிடம் இருந்து 55 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.



