திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண் 19 திருநீலகண்டபுரம் மத்திய வீதியில் தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் 2022-&2023 கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மண்டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜ். மாமன்ற உறுப்பினர் லதா, கேபிள் மோகன், திமுக வார்டு செயலாளர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகளும் ஊர் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்