தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகில், மீனாட்சிபுரம் ரோடு மேற்கு, எண்.4-தரை தளம், என்ற முகவரியில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தூத்துக்குடி கிளையின் புதிய வளாகத் திறப்பு விழா இன்று (13ம் தேதி) காலை நடைபெற்றது.
இதனை வேலவன் ஹைப்பர் மார்கெட் நிர்வாக இயக்குனர் ஏ.தங்கவேல் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
விழாவில் தூத்துக்குடி கிளை மேலாளர் ஜி.பிரைட்சன், எஸ்.என்.பாலாஜி (கோயம்புத்தூர் மண்டலம்), தூத்துக்குடி மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் மற்றும் வங்கியின் அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.



