fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்: வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம்

நாமக்கல்: வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் எழுத்தாளர்கள் நாகு அன்பழகன், கேசவமூர்த்தி, ராஜகோ பாலன், கவிஞர் குமரேசன், மற்றும் ஆசிரியை பங்கஜம் ஆகியோர் தங்கள் எழுதிய புத்தகங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

வாசிப்பின் முக்கியத்துவம், அதை எப்படி மேம்படுத்துவது, எப்படி பொதுமக்களை நூலகத்தின் பயன்களை பெற வைப்பது, மிக முக்கியமாக எவ்வாறு இன்றைய இளைய மாணவர் சமுதாயத்தை டிஜிட்டல் உலகில் மொபைல் போன், எலக்ட்ரானிக் மீடியாவில் சிக்கி உள்ளவர்களை வாசிப்பின் பக்கம் திருப்புவது போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் நடை பெறும் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மருத்துவர் சண்முக சுந்தரம், ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, அந்தோணிசாமி, முனைவர் சண்முகம், ரவி, கண்மணி, ஜெகதீஸ்வரி, பன்னீர்செல்வம், ரூத், ஜமுனாராணி, தீனா, மற்றும் பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img