கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 25 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
12 வயது பிரிவில் ஹர்ஷவர்த்தினி குண்டு எறிதலிலும், கலாவதி தடை தாண்டுதலிலும் முதலிடம் பெற்றனர்.
14 வயது பிரிவில் பிரதிக்ஷா உயரம் தாண்டுதலிலும், 16 வயது பிரிவில் பிரியதர்ஷினி 400 மீட்டர் ஓட்டத்திலும் முதலிடம் பெற்றனர். 18 வயது பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் கிடைத்தது.
வெற்றி பெற்ற மாணவிகளை வேந்தர் மீனாட்சிசுந்தரம் பாராட்டினார்.
துணைவேந்தர் பாரதி ஹரிஷங்கர், முனைவர் கௌரி ராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர் காமினி கிருஷ்ண குமாரி சுரேந்திரன், மருத்துவர் ராஜேஷ், தலைமை ஆசிரியர் நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



