சென்னையில் நடைபெற்ற ஐம்பெரும் விருதுகள் வழங்கும் விழாவில், ராமநாத புரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரி யர் மங்களநாதனுக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த விழாவில், நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக சீர்மிகு நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடர்பு அலுவலர் விருது மற்றும் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை பள்ளிக்கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ், தொடக்கக்கல்வி இயக்குநர் க. சசிகலா ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.



