Homeபிற செய்திகள்பொங்கல் 2027 வேட்டி, சேலை உற்பத்தி: கோ-ஆப்டெக்ஸ் தர ஆய்வு மையத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி...

பொங்கல் 2027 வேட்டி, சேலை உற்பத்தி: கோ-ஆப்டெக்ஸ் தர ஆய்வு மையத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி திடீர் ஆய்வு

பொங்கல் 2027 வேட்டி, சேலை வழங் கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் தர ஆய்வுப் பணிகளை, ஈரோடு வில்லரசம்பட்டி யில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் தர ஆய்வு மையத் தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் மா. விஜய் பாலாஜி திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, 2027-ஆம் ஆண்டுக்கான வேட்டி, சேலை வழங் கும் திட்டத்தில் ஒதுக்கப்பட் டுள்ள உற்பத்தி இலக்கு கள் மற்றும் தற்போதைய உற்பத்தி நிலவரம் குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும், தர ஆய்வு மையத்தில் இருப்பில் உள்ள வேட்டி, சேலைகளின் எண் ணிக்கை, நீளம், அகலம் மற்றும் தரம் ஆகிய வற்றைச் சரிபார்த் தார்.
நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி இலக்குகளை உரிய காலத்திற்குள் எட்டுவதற்காக, ஈரோடு பவானி சாலையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை, வீரப்பன்சத்திரம் துரைசாமி வீதி, ஈ.எச்.227-இல் உள்ள வள்ளலார் விசைத்தறி மையம் மற்றும் நசியனூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலைக் கழக சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட இடங்களிலும் அமைச்சர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பொங்கல் பண்டி கைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தரமான தாகவும், எவ்வித குறை பாடுகளும் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, துறை சார்ந்த மேலா ளர்கள் மற்றும் அலு வலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img