கோவை 324சி மாவட்டத்திற்கு உள்ளடங்கிய ஹேப்பி ஹோம் லைன்ஸ் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இடையர்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஹேப்பி ஹோம் முன்னாள் தலைவர் புகழேந்தி, பட்டய தலைவர் பூமிநாதன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
புதிய நிர்வாகிகளாக ஹரிஷ்குமார், செயலாளராக ஹேமமாலினி, இணைச் செயலாளராக டாக்டர் புவனேஸ்வரி, பொருளாளராக சிந்து ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு முன்னாள் ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியம் அறிமுகப்படுத்தி பதவியில் அமர செய்தார். மேலும் புதிய உறுப்பினர்களை கோவை டைட்டில் சிட்டி அரிமா சங்க பட்டய தலைவர் ராமலிங்கம் அறிமுகம் செய்து அவர்களை உறுப்பினராக சேர்த்தார்.
மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கவர்னர்கள் ஜெயசேகரன், சண்முகம், ஜிஎல்டி கோஆர்டினேட்டர் கஸ்தூரி சண்முகம், திருப்பூர் ஈஸ்ட் சங்க பொருளாளர் விஜய் கீதா மற்றும் பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கால் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, 20 பெண்களுக்கு, சேலைகள், ஆண்களுக்கு வேஷ்டிகள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.