தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் திறனையும், புதுமையான யோசனைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு நடத்தப்பட்ட மாபெரும் டிபிடி இன்னோ வேஷன் ஐடியா 2023 போட்டிகளில் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
போட்டியினை தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி. கார்த்திகேயன் துவக்கிவைத்து பேசும்போது, போட்டிகள் மாணவர் களின் புதுமையான யோசனைகளை வெளிக்கொணர பெரிதும் உதவும் என்றார்.
கல்லூரி தலைவர் வள்ளியப்பா பார்வையிட்டு பள்ளி மாணவர்களின் படைப்புகளை பாராட்டினார்.
கண்காட்சியின் பரிசளிப்பு விழாவில் தெற்கு ரயில்வே கோட்டம் சீனியர் பிரிவு நிதி மேலாளர் எஸ்.மணிகண்டன் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.
கண்காட்சியில்Smart Agriculture, Health Care, Smart City, Artificial Intelligence, Green Energy – Drone என்ற ஆறு பிரிவுகளில், பள்ளி மாணவ, மாணவியரின் 650-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. சுமார் 5000 மாணவ, மாண வியர் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு பயன்பெற்றனர்.