fbpx
Homeபிற செய்திகள்விமான ஊர்திகளின் உதிரிபாகங்கள், ட்ரோன்ஸ் கண்காட்சி

விமான ஊர்திகளின் உதிரிபாகங்கள், ட்ரோன்ஸ் கண்காட்சி

யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பாக விமான ஊர்திகளின் உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன்ஸ் கண்காட்சி மூன்று நாட்கள் நடந்தன.

இதில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள் மற்றும் சில சிறு விமானங்களின் செயல்பாடு ஆகியவை மாணவர்களுக்கு கண்காட் சிக்காக வைக்கப் பட்டிருந்தது.முதல் நாளில் 3800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

துவக்க நிகழ்ச்சியில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், ரிசர்வ் போலீஸ்
படையின் தளபதி ராஜேஷ் டோக்ரா துவக்கி வைத்தனர்.

கோவை ரெட் ஃபீல்ட் நிர்வாகத் தளபதி கர்னல் பிஜூ வானூர்திகளின் மாதிரிகளை வானில் பறக்க விட்டு மாணவர்கள் இடையே வரும் காலங்க ளில் மருத்துவம் மற்றும் இன்ன பிற அவசர தேவைகளுக்கு வானூர்திகளின் செயல் பாடு மகத்துவத்தை எடுத்துரைத்தார்.

யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கைலாஷ் குமார், செயலாளர் அருண் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் ராதா கிருஷ்ணன் வரவேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img