fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் - ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு பங்கேற்பு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் – ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு பங்கேற்பு

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகி யோர் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாச்சலேசு வரர் திருக்கோயில் திருக் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச் சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி(செங்கம்), பெ.சு.தி. சரவணன் (கல சப்பாக்கம்), மாநில தடகளச் சங்கத்துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இணை ஆணை யர், மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ஆணையாளர், போக்குவரத்து துறை சார்பாக பொது மேலாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்களிடம் எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து இக்கூட் டத்தில் வர்த்தக சங்கம், தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், அருணகிரிநாதர் மணிமண்டபம் உள்ளிட்ட பொதுநல சங்கங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள் ளிட்டவர்களிடம் கடந்த கால தீபத்திருவிழாவின் போது ஏற்பட்ட இடை யூறுகள் குறித்தும் அவற் றை சரிசெய்வதற்கு மேற் கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் கேட்டறிந்து, அந்த இடையூறுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்கள்.
தொடர்ந்து இக்கூட் டத்தில் அமைச்சர் கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக்கோரிக்கையின் போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப் பாக உள்ளது என்பதற்கு கடந்த ஆண்டு திரு வண்ணாமலையில் சிறப்பாக நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திரு விழாவே சான்று.
திருவண்ணாமலை மாந கருக்குள் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் போது பக்தர்களிடம் அதிக கட் டணம் வசூலிக்ககூடாது என போக்குவரத்து துறை அலுவலர்கள் மூலமாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்திடம் எடுத்துரைக் கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே வருகின்ற டிசம்பர் 13 அன்று நடைபெறும் திருக்கார்த்திகை தீபதிரு விழா சிறப்பாக நடைபெற அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஒருங் கிணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரி வித்தனர்.

இந்த ஆய்வுக்கூட்டத் தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. எம்.சுதாகர், மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்க் , கூடுதல் ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை சுகுமார், இணை ஆணையர், அருள் மிகு அருணாச்சலே சுவரர் திருக்கோயில் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனி வாசன், மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர் கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img