தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார்.
அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற அறிவிப்பின்படி ரூ.5.40 கோடி மதிப்பில் தண்டராம்பட்டு வட்டம், வாணாபுரம் ஊராட்சியில் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் “புதிய திருமண மண்டபம் கட்டும் பணி”, ரூ.1.07 கோடி மதிப்பில் திருவண்ணாமலை நகர் அருள்மிகு நந்தவன கட்டளைக்கு சொந்தமான இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி, ரூ.36.41 கோடி மதிப்பில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பெருத்திட்ட வரைவு பணிகள், ரூ.5.00 கோடி மதிப்பில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கோபுரங்கள் மற்றும் விபாளங்கள் இரவு நேரங்களில் ஒளிரும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும் பணி, ரூ.2.57 கோடி மதிப்பில் 7 தீர்த்த குளங்கள் சீரமைத்தல் பணி, ரூ. 57 லட்சம் மதிப்பில் அருள்மிகு குபேர லிங்கம் திருக்கோயிலின் முன்புறம் வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரலையில் நன்றி தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் அருணாச்சலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் அரசு துறைச்சார்ந்த
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.