மாப்பிள்ளையூரணியில் நடந்த கிராம சபை கூட்டத் தில் கல்லூரி மாணவி வீரபாண்டிய கட்ட பொம்மன் வேடமணிந்து மனு அளித்த சம்பவம் பர ரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் இன்று ஜோதிபாசு நகர் எனும் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டார்கள் கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சரவ ணகுமார் தலைமை தாங்கி னார். இந்த கூட்டத்தில் தூத் துக்குடி ஏபிசி கல்லூரியில் மூன்றாவது ஆண்டு வேதியல் பிரிவில் கல்வி பயின்று வரும்மாணவி சந் தியா தங்கள் பகுதியைச் சேர்ந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குடியி ருந்து வருகின்றனர்.
இந்த மக்களில் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு குடியிருப்பு மனைகளுக்கு இலவசவீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை இதனை பல்வேறு கூட்டங்க ளில் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஏனென்றால் மேற்படி ஊராட்சியானது தூத்துக் குடியில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் பட்டா வழங்கக் கூடாது என்ற தடையாணை அரசால் பிறப் பிக்கப்பட்டுள்ளது. இத னால் பட்டா வழங்க மார்க்கமில்லை என்ற நிலை இருந்து வந்தது.
இதனை கருத்தில் கொண்ட மாணவி சந்தியா ஓட்டப்பிடாரம் சுதந்திரப் போராட்ட தியாகி வீரபாண்டிய கட்ட பொம்மன் வேடமணிந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப் பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் தடையாணையை நீக்கி பட்டா வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் சரவணகுமார் அவர்களை சந்தித்து மனு அளித்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.