கனரா வங்கி ஈரோடு பிராந்திய அலுவலகம், சிஎஸ்ஆர் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 60 பேருக்கு டாக்டர் அம்பேத்கர் கனரா வித்யா ஜோதி திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பிராந்திய அலுவலக வளாகத்தில் வங்கியின் துணைப் பொது மேலாளர் கே.செந்தில் குமார் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜுன் மற்றும் வங்கியின் கோட்ட மேலாளர் (பொறுப்பு) சபால், எஸ்.சத்யன், மேலாளர் எஸ்.யாழினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.