fbpx
Homeபிற செய்திகள்தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் ஆண்டு விழா கொண்டாட்டம்

தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிருஷ்டி கே ரங் எனும் இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் தலைப்பில் விழா நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் பால புவனேஸ்வரி மற்றும் நிர்வாக அறங்காவலர் பால முகுந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சிந்தனை கவிஞர் கவிதாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் அவர் கூறியதாவது: கல்வி கற்கும் மாணவர்கள் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் உழவு தொழில் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உணவின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத் துவது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் அரங்கேற்றினர்.

இதில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் உள்ளிட்ட இயற்கைக்கான வண்ணங்களில் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் எல்.கே.ஜி பயிலும் குழந்தைகள் முதலான சிறுவர் சிறுமிகள் பல்வேறு வண்ண உடையணிந்து நடனம் ஆடினர். வண்ண ஆடைகள் அணிந்து மாணவ,மாணவிகள் நடத்திய இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இவ்விழாவில் பள்ளியின் முதன்மை கல்வியாளர் ஹேமலதா, பள்ளி முதல்வர் செந்தில் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img