கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பயிலும் மாணவிகள், அன்னூர் அடுத்த பொகலூர் வட்டாரப் பகுதியில் தங்களது தோட்டக்கலை அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, தென்னை மரத்தின் நுண்ணூட்டச் சத்தை அதிகரிப்பதற்காக எருக்கிலை கரைசல் செயல் முறை விளக்கத்தை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய மக்கள் கலந்து கொண்டனர்.
மாணவிகள் எருக்கிலை கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், இச்சுற்று வட்டார பகுதியில் தென்னை மரங்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறித்து மாணவிகள் தகவல்களை அறிந்து கொண்டனர்.



