பல்லடம் அருகே அரக்குளம், கரடிவாவி பகுதியில் அமைந்துள்ள லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், 01.02.2026 அன்று பாரா அகாடமி ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளி நடத்திய மாநில அளவிலான திறந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி “Champions Vs Champions”-ல் சிறப்பாக பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் பள்ளி மாணவர்கள் 5 முதல் இடங்கள், 5 இரண்டாம் இடங்கள், 8 மூன்றாம் இடங்கள் பெற்றதுடன், மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களை பள்ளியின் தலைவர் PMJF லயன் டாக்டர் கே.கந்தசாமி, PMJF ஏ.நடராஜன் (PDG – இணை மேலாண்மை அறங்காவலர்), செயலாளர் ராம்குமார், பொருளாளர் கருணாநிதி, தொடர்பாளர் கோவிந்தராஜு மற்றும் அறங்காவலர் ஐயப்ப பாலாஜி ஆகியோர் பாராட்டினர். மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டர் சரவணன் பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியை மேலாளர் விக்னேஷ் பரமாத்மா, முதல்வர் ஆர்.சிவபாலன், ஒருங்கிணைப்பாளர் வினிலா டானி D.A., கராத்தே பொறுப்பாசிரியர்கள் எஸ்.ஜனனி, மற்றும் வி.கிருஷ்ணவேணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.



