fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்லில் அனைந்திந்திய கூட்டுறவு வார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாமக்கல்லில் அனைந்திந்திய கூட்டுறவு வார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாமக்கல் மாவட்டத்தில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், கூட்டுறவு வார விழா நவம்பர் 14ம் தேதி துவங்கி நவம்பர் 20ம் தேதி வரை 71வது கூட்டுறவு வார விழா நடைபெற இருக்கிறது. கூட்டுறவு வார விழா துவக்க விழா நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கூட்டுறவு உறுதிமொழியை வாசித்தார். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் இராஜேஸ்குமார் எம்.பி. கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து வார விழாவை துவக்கி வைத்தார்.
வார விழாவை முன்னிட்டு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் கூட்டுறவு கொடியேற்றும் நிகழ்ச்சியும், மரம் நடும் விழாவும் நடைபெறும். மேலும் கூட்டுறவின் சிறப்புகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படவுள்ளது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மாபெரும் விற்பனை மேளாவும், ரத்த தான முகாமும் நடைபெற உள்ளது.

மேலும் பொதுமக்களின் நலனுக்காக பொது மருத்துவ முகாம். கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகளும், உறுப்பினர் சந்திப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது. கால்நடை மருத்துவ முகாம், இளைஞர் ஈர்ப்பு முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. கைத்தறி கண்காட்சியும் நடைபெறும் என இணை பதிவாளர் தெரிவித்தார். விழா நிறைவு நாளான நவம்பர் 20-ந்தேதி மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கூட்டுறவு நிர்வாகிகள், பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img