fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணியை தொடங்கிய கைத்தறிதுறை அமைச்சர்...

ராணிப்பேட்டையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணியை தொடங்கிய கைத்தறிதுறை அமைச்சர் ஆர்.காந்தி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 11ஆம் தேதியன்று இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப் பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கு காணொலிகாட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நேற்று இராணிப்பேட்டை காரை கூட்ரோடு, ஆயுதப்படை காவல் வளாகம் அருகில் இராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கு பூமி பூஜையிட்டு பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா. ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல். ஈஸ்வரப்பன், இராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், இராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன் மற்றும் நகரமன்ற உறுப்பினர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img