fbpx
Homeபிற செய்திகள்வரலாற்றை பேசும் அரசமைப்பு சட்ட அருங்காட்சியகம் துவக்கம்

வரலாற்றை பேசும் அரசமைப்பு சட்ட அருங்காட்சியகம் துவக்கம்

இந்தியாவின் முதல் அரசமைப்பு சட்ட அருங்காட்சியகத்தை ஜிண்டால் குளோபல் பல்கலை நிறுவுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசமைப்பு சட்டம் கடந்து வந்த பாதையை எடுத்துக்காட்ட ஆர்வமூட்டும் சாதனங்கள், காட்சிப்பொருட்கள் மற்றும் இன்டராக்டிவ் டிஸ்பிளேக்களை இந்த அருங்காட்சியகம் கொண்டிருக்கும். 

நமது அரசமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பிரிவு மற்றும் அவைகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள ஒரு சிறந்த அமைவிடமாக இது இருக்கும்.  

ஐஐடி மெட்ராஸ் உடனான JGU-யின் கூட்டாண்மையானது, கடந்தகால வரலாற்றை உயிரோட்டமுள்ளதாக கொண்டு வருகின்ற ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கும் குறிக்கோளோடு சமீபத்திய வடிவமைப்பு, ரோபோக்களின் பயன்பாடு, மிகச்சிறப்பான வன்பொருள் சாதனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை வழங்கும். 

ஐஐடி மெட்ராஸின் இயக்குனர்  காமகோடி பேசுகையில், 

“வரலாற்றை உயிரோட்டமானதாக கொண்டு வரும் SAMVID என்ற ஒரு மனித வடிவிலான ரோபோ வழியாக, இந்தியாவில் அரசமைப்பு சட்ட வரலாற்றை ஆர்வமுள்ளதாக வழங்கும் திட்டத்திற்கு பங்களிப்பதில் ஐஐடி மெட்ராஸ் பெருமிதம் கொள்கிறது” என்றார்.

தொடர்ந்து JGU-வின் துணை வேந்தர் ராஜ்குமார், ஐஐடி மெட்ராஸின் பொறியியல் வடிவமைப்பு துறை ஆர்பிஜி லேப்ஸ்ன் தலைவர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் 

அரசமைப்பு சட்ட அருங்காட்சியகம் குறித்து பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img