தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சர்வேசுரன் கோவில் என்று அனைத்து மதத்தினரால் அழைக்கப்படும் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் ஆரம்பர சப்பர பவனி நடைபெற்றது.
தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 361 ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம் கடந்த 20ம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலை மாலை நேரங்களில் நவநாள் சிறப்பு திருப்பலி மற்றும் அதி தூதரை பற்றிய தலைப்புகளில் மறையுரையும் நற்கருணை ஆராதனையும் ஆலயத்தை சுற்றி சிறிய சப்ரபவனியும் தினமும் நடைபெற்றது.
அதை தொடர்ந்து 8ஆம் நாள் நவநாள் அன்று மாலை மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து நற்கருணை பவனி ஆரம்பித்து திருத்தலம் வந்து சேர்ந்தவுடன் முன்னாள் ஆயர் ஜீடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து 9ம் நவ நாளின் திருப்பலியை பாளை மறை மாவட்ட முதன்மை குரு குழந்தை ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது இதில் சேரன்மகாதேவி பங்கு தந்தை மரிய பிரான்சிஸ் கலந்து கொண்டார் அதன் பின் ஆடம்பர சப்பர பவனி நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து திருத்தலம் வந்தது.
இந்த சப்பரபவனியில் கேரளா மாநிலத்தில் உள்ள இறைமக்கள் மற்றும் தென்காசி சுற்றுபுற நகரங்களில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குத் தந்தையும் வட்டார அதிபருமான முனைவர் போஸ்கோ குணசீலன் உதவி பங்குத்தந்தை மார்டின் மற்றும் அமலவை அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், அனைத்து அன்பியங்களின் இறை சமூகத்தினர் செய்து வருகின்றனர்.