Homeபிற செய்திகள்தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியில் சுதந்திர தின விழா

தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியில் சுதந்திர தின விழா

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
விழாவில் உரங்கள் குழும தொழில்நுட்ப இயக்குநர் செந்தில்நாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளின் தேசப்பற்று பாடல், பரதநாட்டியம், தமிழ் மற்றும் ஆங்கில உரைகள், கவிதைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பள்ளிச் செயலாளர் டி.வி.எஸ். பிரேம்சந்தர், தலைமையாசிரியர் எல்.பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவன உயர்
அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img