fbpx
Homeபிற செய்திகள்‘சமூக, பொருளாதார ரீதியாக மாற்றியமைத்தவர் கருணாநிதி’ நூற்றாண்டு விழா கருத்தரங்கில் புகழாரம்

‘சமூக, பொருளாதார ரீதியாக மாற்றியமைத்தவர் கருணாநிதி’ நூற்றாண்டு விழா கருத்தரங்கில் புகழாரம்

தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம், ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் நடந்தது.
முன்னாள் பேரவைத் தலைவர் ஆர். ஆவுடையப்பன், முன்னாள் பேரவைச் செயலாளர் மா. செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுப்பிரமணியபுரம், வாசுதேவ நல்லூர், இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி, டி.என்.புதுக்குடி, புளியங்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ஈ.ராஜா தெரிவித்ததாவது:
ஐந்து முறை முதல்வராக பதவி வகித்த தலைவர் கலைஞர், தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியா வின் முன்னணி மாநிலமாக உரு வாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

இந்தியாவின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவரும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 – 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல் வியை சந்திக்காதவர். தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றியமைத்தவர் என்றார்.

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார் பேசிய தாவது: கலைஞர் ஆற்றிய பணிகளை பேச நூற்றாண்டுகள் பல வேண்டும் நெஞ்சுக்கு நீதி என்னும் அவரது புத்தகத்தில் அவரது அரசியல் அனுபவங்களை விரிவாக விளக்கியுள்ளார். தமிழ் நாட்டை சீரிய நாடாக உரு வாக்கிய சிற்பி என்றார்.

முன்னாள் பேரவை செயலா ளர் மா.செல்வராஜ் பேசியதாவது:
கலைஞரின் சட்டமன்ற வாழ்க்கை, உரைகள், சம யோசித புத்தி, அயராத உழைப்பு, எடுத்த பணிகளை தாமதிக் காமல் நிறைவேற்றும் திறன், முடியாததையும் முடிக்கும் செய லாற்றல் ஆகிய அரிய பண்புகள் மிகவும் போற்றத் தக்கவை. அவரது வாழ்க்கை மாணவர்களுக்கு ஒரு பாடமாக திகழ்கிறது என்றார்.

பேரவை முன்னாள் தலைவர் ஆர். ஆவுடையப்பன் தெரிவித் ததாவது: கலைஞர் காட்டிய வழியில் தான் சட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆட்சியும் அவர் காட்டிய வழியில் தான் நடைபெறுகிறது. கலை ஞரின் சட்டமன்ற வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பரிசு பெற்ற மாணவர்கள்

வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞரின் படைப்பு களில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி கு. காவிய பிரியா முதல் பரிசையும் தமிழ் மொழியின் எழுச்சிக்கு கலைஞர் செய்த சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசிய மாணவி க.சூரியகலா இரண்டாவது பரிசையும், மக ளிர் நலனில் கலைஞர் என்ற தலைப் பில் பேசிய மாணவி மு.சாகிதா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாசுதேவ நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ரா. எழிலரசி முதல் பரிசையும், கரிவலம்வந்தநல்லூர் அரசு மே.நி.பள்ளி கி கவிஷா 2-வது பரிசையும், சேர்ந்தமங்கலம் அரசு மே.நி.பள்ளி சு. ராமர் 3-வது பரி சையும் பெற்றனர்.
சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச் செயலாளர் சாந்தி, துணைச் செய லாளர் ரேவதி, சார்பு செயலாளர் வரதராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, புளியங் குடி நகர்மன்றத் தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img