fbpx
Homeபிற செய்திகள்ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

தமிழ்நாட்டில் ஜாதி வாரியான கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில அரசு உண்மையான சமூக நீதியை உறுதி செய்ய புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க கொள்கை முடிவை மேற்கொண்டு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மாற்றுக் கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஏற்படுத்திய தடை களை தகர்த்து, வெற்றிகரமாக ஜாதி வாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை எடுத்து அறிவித்துள்ளது.

அதேபோன்று ஒரிசா உள்பட பல மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் ஜாதிவாதி கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் சமூக நீதியை முன் னெடுத்த முதல் மாநிலமான தமிழகம் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க தாமதம் செய்து வருகிறது, தவிர்க்கவும் முயல் கிறது. இது பிற்படுத்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தை
இருளாக்க முயல்வதாகும்.

இதுகுறித்து பிற்ப டுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் ரத்னா சபாபதி, நிர்வாகிகள் வெள்ளிங்கிரி சண்முகம், செந்தில் நாயகம், பொன்னுசாமி ஆகியோர் கூறியதாவது:

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான மற்றும் சமூக நீதிக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஒரே கோரிக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஜாதி வாரி கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என்பதுதான்.

எங்களது கோரிக்கைகளை இரு அரசுகளும் புறக்கணிக்கின்றன. இம்மாத இறுதியில் அரசியல் சார்பு இல்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி தொடர் போராட்ட நடவடிக்கைகளை இறுதி செய்து அறிவிப்போம் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img