ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில் உலக தரத்திலான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியீடு செய்வது தொடர்பான ஆசிரியர் மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி தலைவர் வி.சண்முகன் தலைமை யில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மலேசியாவின் “இன்டி” சர்வதேச பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி களின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு துறையின் இயக்குனர் முனைவர் அசோகன் வாசுதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ச.நந்தகோபால் முன்னிலை வகித்தார்.
கல்லூரி அறக்கட்ட ளைகள் நிர்வாகிகள் பானுமதி சண்முகன், எஸ்.நந்தகுமார் பிரதீப் எஸ்.திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



