கோத்தகிரியில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவம் பொங்கட்டும் தமிழகம் வெல்லட்டும் என்ற தலைப்பில் திராவிட பொங்கல் கால்பந்து போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் கோத்தகிரி புல்சன் கால் பந்து கழக அணியும், ஊட்டி காந்தல் பகுதி ரவி கால்பந்து கழக அணியும் மோதின. இதில் கோத்தகிரி புல்சன் அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற கால்பந்து அணிக்கு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பரிசுக் கோப்பை மற்றும் ரொக்க பரிசினை வழங்கி கௌர வித்தார். கோத்தகிரி ஒன்றிய திமுக செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கால்பந்து இறுதி போட்டியில் மாவட்ட திமுக செயலாளர் கே.எம்.ராஜு, செயற்குழு உறுப்பினர் எக்ஸ்போ செந்தில், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன் உட்பட ஏராளமான பொதுமக்கள், கால்பந் தாட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ரசித்து பார்த்தனர்.



