fbpx
Homeபிற செய்திகள்திமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம்: ‘பிங்க் பூங்கா’ திறந்துவைத்து கனிமொழி எம்.பி பேச்சு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம்: ‘பிங்க் பூங்கா’ திறந்துவைத்து கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி முத்தையாபுரம் எம்டிஏ காலனி பகுதியில், தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ.84.50 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கென பிரத்யேக “மகளிர் பூங்கா” என்னும் பிங்க் பூங்காவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடா ளுமன்ற திமுக குழுத் தலை வருமான கனிமொழி நேற்று திறந்து வைத்தார்.

பூங்காவில் யோகா பயிற்சிக் கூடம், ஸும்பா, இறகுப் பந்து மைதானம், குளிர்சாதன வசதியுள்ள உடற்பயிற்சிக் கூடம், டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
நிகழ்வில் கனிமொழி எம்.பி பேசியதாவது: நாம் இன்று திறந்து வைத்துள்ள இந்த பிங்க் பார்க் என்பது முழுமையாக மகளிருக்கான ஒரு பூங்கா. இதைப்பற்றி நான் அதிகமாக விளக்க வேண்டி யதில்லை. நாங்கள் வரும்போதே பெண்கள் மிகச் சிறப்பாக யோகா, ஸும்பா செய்து கொண் டும், சிலம்பம் சுற்றிக் கொண்டும் இருந்தனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது மனதிற்கு ஒரு பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ஏனென்றால், பெண்கள் பிறந்த நாளிலிருந்து தங்களது உடலைப் பற்றி அதிகமாகக் கவலைப்படக் கூடாது, அதைக் குறித்து அக்க றையில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லி வளர்க் கப்படுகிறோம்.

வீட்டிலுள்ள அனைவரும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் தங் களது உடல்நலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே பெரும்பாலும் நடக்கிறது.
மேலும், மற்றவர்களின் முன்னிலையில் நடப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ பெண்களுக்கு ஒரு பெரிய மனத் தடையாக இருக்கும். ஆனால் இந்தப் பிங்க் பார்க் கில் பெண்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதையும், யோகா செய்வதையும், சிலம்பம் சுற்று வதையும் பார்க்கும்போது, அவர்கள் அந்த மனத் தடைகளை தாண்டி வரத் தொடங்கி யுள்ளார்கள் என்பதே மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இன்னும் பல இடங்களில் இதுபோன்ற பிங்க் பார்க்குகள் திறக்கப்பட வேண்டும். தமிழ் நாடு முழுவதும் மக்கள் பயன் பாட்டிற்காக அதிகமான பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
உப்பளங்களில் வேலை செய்யும் பெண்கள், இயற்கை உபாதைகளுக்காக கழிவறை வசதி இல்லாமல் பெரும் சிர மங்களை எதிர்கொண்டனர். இதனால் பலர் சிறுநீரக மற்றும் மூத்திரப்பாதை தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றைக்கு அந்த இடங்களில் கழிவறைகள் அமைக் கப்பட்டுள்ளதால் அந்த நிலை பெருமளவில் மாறியுள்ளது.

அதனால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது பெண்களுக்காக முக்கியத்துவம் தரக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், சரி சமமாக அதைவிட அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருக்கக்கூடிய மாநிலத்திலே அவர்களுக்கான ஒரு ஆட்சியை இங்கு நாம் கண்கூடாகப் பார்த் துக் கொண்டிருக்கிறோம்.

அது பேருந்து பயணமாக இருக்கட்டும், கல்வியாக இருக்கட் டும், மகளிர் உரிமைத் தொகையாக இருக்கட்டும், பல்வேறு திட் டங்களை நிறைவேற்றிக் கொண் டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரி யங்கா, மாநகராட்சி அலுவலர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img