fbpx
Homeபிற செய்திகள்வரி ஆலோசகர் சங்க சுதந்திர தின விழா கொண்டாட்டம்

வரி ஆலோசகர் சங்க சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் நடைபெற்ற வரி ஆலோச கர் சங்க கூட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து வரி ஆலோசகர் சங்கத்தின் 17ம் ஆண்டு ஆலோசனை கூட்டம் கோவை வடகோவை குஜராத் சமாஜ் வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக சுதந்திர தினவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வரி ஆலோசகர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்துச் சித்தர் முகில் தினகரன், தமிழ் செம்மல் கலைமாமணி ராமலிங்கம் மற்றும் நிறுவனர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் வரி ஆலோசகர் சங்கத்தின் செயலாளர் சபரிநாதன், துணை த்தலைவர் ரமேஷ், துணைச்செயலாளர் ராஜேஷ் குமார், பொருளாளர் முருகேஷ் குமார் மற்றும் சிவதாசன், பிரவின் குமார், சுப்பிரமணியன், ராகவேந்திரன், மெய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர் சுரேஷ்,நிர்வாகி செந்தில் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img