பொள்ளாச்சியில் ஆயிரவைசியர் செட்டியார்கள் இளைஞர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழவில் கலை மாமணி பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் கலந்து கொண்டு வளரும் இளம் கலைஞன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:-
செவப்பி படத்தில் நடித்த குழந்தை மாஸ்டர் ஷ்ரவன் நடிப்பினை பார்த்து மிகவும் வியந்து போனேன். ஒரு நாய்க்குட்டியை பழக்கலாம் ஒரு பூனைக்குட்டியை பழக்ககலாம். ஆனால் ஒரு கோழியை தன் நண்பனாக வளர்த்து செவப்பி என்னும் படத்தின் மூலம் மிகச் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்திய மாஸ்டர் ஷ்ரவன் திறமையைக் கண்டு வியந்து போனேன்.
நான் ஆறாவது படிக்கும் போது புரட்சி தலைவருக்கு பாரத் விருது வழங்கும் விழாவில் என்னை பாட சொன்னார்கள். நான் பாடி முடித்தவுடன் புரட்சித்தலைவர் என்னை அழைத்து அருமையாக பாடினாய் என பாராட்டினார்.
அது போல்மாஸ்டர் ஷ்ரவன் மிக நன்றாக படித்தும் திறமையையும் வெளிக்காட்டி மிக நன்றாக நடித்துள்ளார்.
இந்த சிறுவனை நமது இளம் தலைமுறையின் கமல் மாஸ்டர் ஷ்ரவன் எனலாம். ஷ்ரவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.