Homeபிற செய்திகள்டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார நிகழ்ச்சி

டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார நிகழ்ச்சி

ராகிங் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,கல்லூரிகளில், ஆக.12 முதல் 18-ம் தேதி வரை ராகிங் எதிர்ப்பு வாரமாக கடை பிடிக்கபடுகிறது.

இந்நிலையில், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் ஆகியோர் இணைந்து ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது.
நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் கனலி என்கிற சுப்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் ராமமூர்த்தி தலைமையுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் ஏ.சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வி பயில்வதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
ராகிங் கில் ஈடுபடும் மாணவர்களுக்கு இந்திய சட்ட பிரிவுகளின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள் குறித்தும் போதைப் பொருள் உபயோகித்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் உரையாற்றினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில், ராகிங் செய்ய மாட்டோம் என்றும் போதைப் பொருள் உபயோகிக்க மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

விழாவில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324-சி மாவட்டத்தின் மகாகவி பாரதியார் மண்டலத் தலைவர் லயன் செந்தில்குமார், கல்லூரி துணை முதல்வர் முனைவர் சரவணன், 324-சி வட்டாரத் தலைவர் . மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்வி ஊக்க தொகையாக 20,000 ரூபாய் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கல்லூரி ராகிங் எதிர்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ரங்க ராமானுஜம், டாக்டர் நமச்சிவாயம் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர்கள் ரேவதி மோகன்ராஜ், கீதா பால்ராஜ், பொருளாளர் திட்டம் தேஜஸ்வினி செந்தில்குமார், சந்திரசேகர், கிரீஷ் ஆகியோர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img