தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கியானது ஐந்து புதிய கிளைகளை ஜமீன் ஊத்துக்குளி (கோவை மாவட்டம்), மங்கலம் (-திருப்பூர் மாவட்டம்), கிருஷ்ணாபுரம் (திருநெல்வேலி மாவட்டம்), கீழ பனங்காடி (மதுரை மாவட்டம்) மற்றும் மோகனூர்-(நாமக்கல் மாவட்டம்) ஆகிய இடங்களில் ஏடிஎம் / சிஆர்எம் வசதியுடன் துவக்கியுள்ளது.
கோவை ஜமீன் ஊத்துக் குளியில் 579வது கிளையை அருண்குமார் கலிங்கராயர் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மங்கலம் 580வது கிளையை அமிர்தம் ஜவுளி ஆலைகள் பங்குதாரர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி கிருஷ்ணா புரத்தில் 581வது கிளையை இன்ஸ்டியூட் ஆப் பிஸ்னஸ் அட்மினிஷ்ட்ரேசன் இயக்குனர் சேவியர் துவக்கி வைத்தார்.
மதுரை கீழ பனங்காடி மாவட்டம் 582வது கிளையை ஐஆர்எஸ் சி.இ.ஓ.எ. கல்விக் குழுமத்தின் நிறுவனத்தலைவர் முனைவர். அலசி. இராசா கிளைமாக்சு துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 583வது கிளையை எம்.எம் ஹாஸ்பிடல் சிவக்குமார் துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக, வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயர் கூறியதாவது:
வங்கியானது ஐந்து கிளைகளை துவக்கியுள்ளது. இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு பெயர் பெற்ற பழை மையான தனியார் துறை வங்கி யாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்று தலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.



