சிதம்பரத்தில் உள்ள கஃப்ட் அகாதெமியை சேர்ந்த என்.மைதிக், தமிழ்நாடு மாநில அளவிலான செஸ் போட்டியில் 7 வயதுக்குட் பட்ட பிரிவில் முதலிடம் பெற்றார். இந்தப் போட்டி கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம்,கடலூர் சதுரங்க அகாதெமி ஆகியவற்றின் கூட்டுத் தொகுப்பில்,கடலூர் சி.கே.பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி யில் அண்மையில் நடை பெற்றது. தமிழ்நாடு மாநில அளவிலான செஸ் போட்டியில் 7 வயதுக்குட்பட்ட பிரிவில் என்.மைதிக் முதலிடம் பெற்றார்.
புதுவை முதல்வர் என்.ரங்கசாமி, கடலூர் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டினர்.



