Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதலாவது டெக்னோ ஸ்போர்ட் ஸ்டோர் துவக்கம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதலாவது டெக்னோ ஸ்போர்ட் ஸ்டோர் துவக்கம்

டெக்னோ ஸ்போர்ட் உயர்தரமிக்க தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் அதிநவீன ஆடைகளையும் விற்பனை செய்யும் நிறுவனமான டெக்னோஸ் போர்ட், கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதலாவது ஸ்டோரை துவக்கி உள்ளது.

சில்லறை விற்பனையில் பலப்படுத்தவும், நடப்பு நிதியாண்டில் விரிவாக்க நடவடிக்கையாக 15-16 ஸ்டோர்களை துவக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த ஸ்டோர் துவக்கப்படுகிறது.

இந்த ஆண்டில், தென்னிந்திய அளவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு புதிய ஸ்டோர்கள் பலவிதமாக துவக்கப்படுகின்றன.

இது குறித்து டெக்னோஸ்போர்ட் இணை நிறுவனர் சுனில் ஜூஞ்சன்வாலா, தலைமை செயல் அதிகாரி புஸ்பென் மெய்தி, இணை நிறுவனர் சுமித் சந்தாலியா ஆகியோர் கூறியதாவது:

கோவை நகரில், எங்களது முதலாவது ஸ்டோரை துவக்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களது வணிக விரிவாக்கத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிரந்தரமான பெயரை கொண்டதாகவும், புனிதமிக்க அனுபவத்தை தரவும், நீண்டகால அடிப் படையில் நிலை நிறுத்ததவும் வலுவான அடித்தளமிட்டுள்ளோம்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img