நேரடி விற்பனை சங்க கூட்டமைப்பு, ஷூலினி பல்கலைக் கழகத்துடன் இணைந்து, ஏப்ரல் 24 அன்று சென்னையில் நேரடி விற்பனையாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நேரடி விற்பனை சங்க உறுப்பு நிறுவனங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் விதமாக 300க்கும் மேற்பட்ட நேரடி விற் பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நேரடி விற் பனை சங்க கூட்டமைப்பின் தலைவர் ரெட்டி, துணைத் தலைவர் ராஜீவ் குப்தா, துணைத் தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் ஷூலினி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பேராசிரியர் தாமஸ் ஜோசப் மற்றும் முனைவர் பேராசிரியர் கமல்காந்த் வசிஷ்ட் உள்ளிட்ட கல்வி நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் இயக்குநர் மோகன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தொடர்ந்து ஏ.பி. ரெட்டி கூறுகையில், “இந்தியாவில் நேரடி விற்பனைத்துறை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு எப்போதும் இத்துறையில் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்த துறை ஆண்டு விற்பனையில் ரூ.26,000 கோடியை ஈர்க்கக்கூடியதாக விரிவடைந்துள் ளது. இதில் நேரடி விற்பனை சங்க உறுப்பினர் நிறுவனங்கள் கூட்டமைப்பு தோராயமாக 31% பங்களிக்கின்றன. 2047ம் ஆண் டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான தனது தொலைநோக்கு பார்வையை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்லும்“ என்றார்.



