இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகுறைகளை கேட்டறிந்தார்.
இக்குறைதீர்வு கூட்டத்தில் வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண் மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள்,
பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டியும் மற்றும் பொதுநலன் குறித்தும் 403 மனுக்களை கலெக்டர் சந்திரகலா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, உதவி ஆணையர் கலால் ராஜ்குமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



