fbpx
Homeதலையங்கம்உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!

கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் வரக் கூடியது. அதனைப் புறக்கணித்து, ஒன்றிய அரசு அவசர அவசரமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த சூழலில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடைமுறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்குரைஞர் ஜி.எஸ். மணி என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இதனை செயல்படுத்த முடியாது. அதாவது, இந்தத் தீர்ப்பின் மூலம் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறானது என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

மாநில உரிமைகளைத் தன் விருப்பம் போல் பறிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு இது முட்டுக்கட்டை மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்தின் அவசியத்திற்கும் மறைமுகமாக பெரியதோர் அழுத்தம் கொடுத்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

வரவேற்கத்தக்க தீர்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img