Homeபிற செய்திகள்திருப்பூரில் பெப்பர்ஃப்ரை புதிய கடை திறப்பு

திருப்பூரில் பெப்பர்ஃப்ரை புதிய கடை திறப்பு

முன்னணி ஆன்லைன் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை நிறுவனமான பெப்பர்ஃப்ரை, திருப்பூரில் தனது புதிய கடையைத் திறந்துள்ளது.
அவினாசி&திருப்பூர் சாலையில் ஓடக்காடு பகுதியில் 1,600 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இக்கடையில், 1,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


இதுகுறித்து பெப்பர்ஃப்ரை தலைமை வணிக அதிகாரி ஹுசைன் கேசுரி கூறுகையில், பெருநகரங்களைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடைவதே நிறுவனத்தின் நோக்கம், என்றார்.
ஃபிரான்சைஸ் ஸ்டோரின் உரிமையாளரான ஜீவானந்தினி, பெப்பர்பிரையுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், என்றார்.
தற்போது நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நகரங்களில் 150-க்கும் அதிகமான கடைகளை பெப்பர்ஃப்ரை கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img