fbpx
Homeபிற செய்திகள்சுந்தரம் பைனான்ஸ் வட்டி விகிதம் மாற்றம்

சுந்தரம் பைனான்ஸ் வட்டி விகிதம் மாற்றம்

சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் 2025 மே 1-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் வகையில் அதன் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியமைக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த ரெப்போ விகித திருத்தத்திற்கு இணக்கமானதாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கு 12 மாதங்கள் காலஅளவுள்ள டெபாசிட்களுக்கு 7.70% மற்றும் 24 மற்றும் 36 மாதங்கள் காலஅளவுகளுக்கு 8% என்பது திருத்தியமைக்கப்பட்ட வட்டி விகிதங்களாக இருக்கும். இவைப் போலவே பிற நபர்களுக்கு 12 மாதங்கள் காலஅளவுக்கான வட்டி விகிதம் 7.20% மற்றும் 24 மற்றும் 36 மாதங்களுக்கு 7.50% என்பதாக இருக்கும்.

இந்த வட்டி விகித மாற்றமானது விரிவான பொருளாதார சூழ்நிலைகளுக்கும், சந்தை இயக்கவியலுக்கும் சுந்தரம் பைனான்ஸ்-ன் பொருத்தமான பதில்வினையை பிரதிபலிக்கிறது. நடப்பு பொருளாதார போக்குகளுக்கு இசைவானதாக இணங்கும் வகையில் தனது நிதிசார் உத்தியை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவும் இந்நடவடிக்கை அமைகிறது.

சமீபத்தில், டிஜிட்டல் டெபாசிட் வசதி திட்டம் என்பதை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலம் சேமிப்புகளை செய்வது அதிக எளிதானதாகவும், கூடுதல் பாதுகாப்பானதாகவும் மற்றும் அனைத்து மக்களும் அணுகி பெறக்கூடியதாகவும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தின் வழியாக இந்த டெபாசிட்களுக்கான ஆன்லைன் பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img