fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சூயஸ் இந்தியா நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

கோவையில் சூயஸ் இந்தியா நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

சூயஸ் இந்தியா நிறுவனம், சமக்ரா சிக்ஷா உள்ளடக்கிய கல்வி மற்றும் பள் ளிக் கல்வித் துறையுடன் இணைந்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை பிக் பஜார் தெருவில் உள்ள நகர்ப்புற வள மைய மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அனுசரித்தது.
“முன்னேற்றதை நோக்கிய சமத்துவமான எதிர்காலத்திற்காக, மாற்றுத் திறனாளிகளின் தலைமையை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளை மையமாக கொண்ட இந்த நிகழ்வு, 18 வயதுக் குட்பட்ட 25 மாற்றுத்திறனாளி பள்ளி குழந்தைகள் மற்றும் 3 சூயஸ் இந்தியா மாற்றுத்திறனாளி ஊழியர்களையும் ஒன்றிணைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமக்ர சிக்ஷா உதவி திட்ட அலுவலர் இளமுருகன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். சூயஸ் இந்தியா கோவை திட்ட இயக்குநர் சங்ராம் பட்டநாயக் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து, இளமுருகன் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு இந்நிகழ்வில் ஒவ்வொருவரும் தங்கள் முழுத் திறனையும் அடைய வாய்ப்புள்ள எதிர்காலத்தை நோக்கிச் செயல்பட ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்” என்றார். தொடர்ந்து, சங்ராம் பட்நாயக் கூறுகையில், “இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதன் மூலம், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பதிலும், அவர்களை மேம்படுத் துவதிலும் சூயஸ் இந்தியா தனது செயல் களால் மீண்டும் உறுதிப்படுத்தியது” என் றார்.

படிக்க வேண்டும்

spot_img